Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் கறுப்புச்சந்தை முதலாளிகளிடம்

October 12, 2021
in News, Sri Lanka News
0
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் கறுப்புச்சந்தை முதலாளிகளிடம்

நல்லாட்சி அரசாங்கத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டபோது, ‘உலகசந்தையில் ஏற்படும் எரிபொருள் விலையதிகரிப்பிற்கு ஏற்றவாறு நாட்டிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின், அரசாங்கம் எதற்கு?’ என்று விமல் வீரவன்ச, உதயகம்மன்பில போன்றவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் தற்போது அரசாங்கத்தில் அங்கம்வகிக்கின்றார்களா ? என்ற சந்தேகம் எழுகின்றது.

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பதற்கான அதிகாரம் கறுப்புச்சந்தை முதலாளிகளிடம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அரசாங்கம் இயங்கவேண்டியதன் அவசியமென்ன? என்று அவர்களிடம் கேட்க விரும்புகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அண்மைக்காலங்களில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய திணைக்களங்களுக்கு முன்னால் பெருமளவானோர் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது.

மிகக்குறுகிய காலத்திற்குள் எரிவாயு, பால்மா, கோதுமைமா உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.

அரிசி மாத்திரமன்றி, எரிவாயு மற்றும் பால்மா உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியப்பொருட்களின் விலைகளையும் தமக்கு நெருக்கமான பெருவர்த்தகர்கள் தீர்மானிக்கக்கூடியவாறான நிலையை அரசாங்கம் தற்போது உருவாக்கியிருக்கின்றது.

பொதுத்தேர்தலின் ஊடாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரிய இந்த அரசாங்கம், அதனைப்பெற்றுக்கொண்டதன் பின்னர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கெனக்கூறி அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்றிக்கொண்டது.

ஆனால் இவ்வனைத்து அதிகாரங்களையும் பெற்றுக்கொண்ட அரசாங்கத்தினால் மக்களின் பிரச்சினைகளில் குறைந்தபட்சம் ஒன்றுக்கேனும் உரியவாறு தீர்வை வழங்கமுடியவில்லை.

அடுத்ததாக அண்மையில் வெளியான ‘பன்டோரா பேப்பர்ஸ்’ பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதித்திருத்தச்சட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டியிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு உள்ளடங்கலாக சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரிகள் ஜனாதிபதியினாலேயே நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்மூலம் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் பலர், கடந்தகாலக் குற்றச்சாட்டுக்களிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கொல்கத்தாவுடனான ஆட்டத்தில் சுனில் நரேனின் சுழலில் சிக்கிய பெங்களூரு வெளியேறியது

Next Post

லங்கா பிரீமியர் லீக் | 699 பேர் விண்ணப்பம்

Next Post
எல்பிஎல் T20 போட்டி: வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்..!

லங்கா பிரீமியர் லீக் | 699 பேர் விண்ணப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

July 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures