அண்மையில் மறைந்த ஈழப் பாடகர் வர்ணா ராமேஸ்வரன் “நாட்டுப் பற்றாளர்” மதிப்பு அளிக்கப் பட்டு கெளரவிக்கப் பட்டுள்ளார்.
தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒலிக்கசிடப்படும் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே..” பாடலில் இவரது குரலும் முதன்மையாக இடம்பெறுகின்றது. இதனால் ஈழத் தமிழ் மக்களின் ஆத்ம அபிமானத்திற்குரியவராக வர்ணராமேஸ்வரன் காணப்படுகிறார்.
இவருடைய உணர்வு பாடல் குரல் கேட்டு ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் உணர்வு பாடலாய் கண்களில் நீரை வரவழைந்த உணர்ச்சிகளை தூண்டிய அந்த குரலின் மறைவு ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவருக்கு நாட்டுப்பற்றாளர் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]