பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதன்பின், கார்த்தி ஜோடியாக ‘தேவ்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சூர்யாவின் ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த அவர், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார். இதுதவிர பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

#No 1 TamilWebSite
