அபுதாபி டி 10 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களுக்கான ஏலத்திற்கு 2 நாட்கள் மாத்திரமே எஞ்சியிருந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் 24 வயதான வனிந்து ஹசரங்கவை தமது அணியில் தக்க வைத்துக்கொள்வதற்கு டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணி நிர்வாகம் தீர்மானித்தது.
இதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டைமல் மில்ஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேகப்பந்துவீச்சாளரான சஹூர் கான் ஆகியோருடன் 24 வயதான வனிந்து ஹசரங்கவும் டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணியால் தக்க வைத்துக்கொள்ளப்பட்ட வீரர்களாக உள்ளனர்.
இந்த அணியின் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்தத்தை மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி வீரரான அண்ட்ரே ரசல் பெறுகிறார்.
தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் வனிந்து ஹசரங்க சர்வதே இருபதுக்கு 20 அரங்கில் அறிமுகப் போட்டியில் தொடர்ச்சியான மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹெற்றிச் சாதனை படைத்த உலகின் மூன்றாவது வீரராக பதிவானார்.
அபுதாபி டி 10 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களுக்கான ஏலம் நாளை (7) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]