Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

“காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் சிலர் பிக்குகளாக மாற்றப்பட்டுள்ளனர்”

October 2, 2021
in News, Sri Lanka News
0
“காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் சிலர் பிக்குகளாக மாற்றப்பட்டுள்ளனர்”

பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதாக நாங்கள் அறிகிறோம், அவர்களில் சிலர் கடத்தப்பட்டு, பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிலர் இராணுவ முகாம்களில் பணியாற்றுகின்றதாகவும், மேலும் சிலர் பிக்குகளாகவும், சிங்களவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வவுனியாவில் 1688ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

ஒற்றுமை என்பது வெறும் பேச்சு மட்டுமல்ல. ஒருங்கிணைந்த கொள்கையுடன் இணைவது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கஜனின் முதல் மருந்தை நாம் எதிர்க்கிறோம். இன்று 1688ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கான எமது போராட்டம் தொடர்கிறது.

இந்த சர்வதேச குழந்தைகள் தினத்தன்று, இரண்டு முக்கியமான செய்திகளை நாம் தமிழர்களுக்குக் எடுத்து இயம்ப விரும்புகிறோம்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் தமிழர்களிடமிருந்து, குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து ஒரு ஒருங்கிணைந்த தீர்மானத்தை விரும்புகிறோம்.

யூதர்கள் பெரும்பாலானோர் தம்மிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும் கூட, தம் குறிக்கோளில் ஒன்றிணைந்தனர். இதன் விளைவாக தான் இன்று இஸ்ரேல் என்று ஒரு நாடு உள்ளது.

அதேபோல் பின்வரும் தீர்மானத்துடன் நாம் இலக்கை அடைய வேண்டும். தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஐ.நா கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு, பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணை, தமிழருக்கான அரசியல் தீர்வு – ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட – மீள பெறப்பட முடியாத தமிழர் தாயகத்தை அடிப்படையாகக் கொண்டது.

காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க அரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தடயவியல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துதல், அரசியல் தீர்வு பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேசமாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கவும்.

ஏனென்றால் நாம் இன்னும் 74 வருடங்கள் ஏமாறக்கூடாது, தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை மத்தியஸ்தர்களாக நாம் பயன்படுத்த வேண்டும் மேற்கண்ட கொள்கைகளை யாரும் மீறக்கூடாது.

போரில் பாதிக்கப்பட்ட நாங்கள் இத் தீர்மானத்தை தயாரிக்க விரும்புகிறோம். இதில் தமிழ் அரசியல்வாதி மற்றும் சிவில் குடிமக்கள், குழுக்களிடமிருந்து கையொப்பங்களை சேகரிக்க விரும்புகிறோம்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். அவர்களில் சிலர் கடத்தப்பட்டு, பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் சிலர் இராணுவ முகாம்களில் பணியாற்றுகின்றனர்.

அவர்களில் சிலர் பிக்குகளாகவும், சிலர் சிங்களவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர். முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக்கின் கூற்றுப்படி, துணை இராணுவக் குழு இளம் சிறுவர் மற்றும் சிறுமிகளை மலேசியா, மாலைத்தீவு மற்றும் இந்தியாவுக்கு அடிமை வேலை மற்றும் பாலியல் அடிமைகளாக அனுப்பியது.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இறப்பு சான்றிதழை தனது முதல் மருந்தாக கொடுக்க விரும்புவதாக அங்கஜன் கூறுகிறார்.

அங்கஜன் இதை நிரூபிக்க விரும்பினால், அவர் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் உயிருடன் இருக்கும் போது எடுத்த படத்தையும், இறக்கும் போது எடுத்த படத்தையும், இறந்த பின் எடுத்த படத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்

Next Post

அனைத்து விடயங்களையும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குவினர் அறிந்து வைத்துள்ளனர்

Next Post
அனைத்து விடயங்களையும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குவினர் அறிந்து வைத்துள்ளனர்

அனைத்து விடயங்களையும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குவினர் அறிந்து வைத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

July 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures