நாளாந்தம் எட்டு மணித்தியாலத்திற்கு அதிகமாக தொடர்ந்து தொலைக்காட்சி, கணினி, கையடக்க பேசி போன்றவற்றை பயன்படுத்தினால், எதிர்காலத்தில் பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இன்றைய திகதியில் 50 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் நாளாந்தம் பத்தரை மணி நேரம் வரை தொலைக்காட்சி, கணினி, மடிக்கணனி, கையடக்கத் தொலைபேசி போன்றவற்றில் நேரத்தை செலவிடுகிறார்கள்.
இதன் காரணமாக இவர்களுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 14 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறிந்து தெரிவிக்கிறார்கள்.
மேலும் இந்த வயதிற்குட்பட்டவர்கள் உட்கார்ந்த நிலையில் அதிகநேரம் பணியாற்றுவதால் இவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரித்திருக்கிறார்கள்.
பக்கவாத பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மாரடைப்பு, இதய செயலிழப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
மேலும் இதனை தவிர்க்க, தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் உட்கார்ந்த நிலையில் பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும், இரண்டு மணித்தியாலத்திற்கு ஒரு முறை எழுந்து சிறிது தொலைவு நடந்து சென்று, உடற்பயிற்சியும், உடலுக்கு விற்றமின் டி சக்தியினை கிடைக்க செய்த பிறகு, மீண்டும் 2 மணிநேரம் உட்கார்ந்து பணியாற்றுவதற்குரிய பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
டொக்டர் ஸ்ரீதேவி
தொகுப்பு அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]