Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

சர்ச்சைகள் குறித்து நாக சைதன்யா விளக்கம்

September 25, 2021
in Cinema, News
0
சர்ச்சைகள் குறித்து நாக சைதன்யா விளக்கம்
நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது.
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி வெகுநாட்களாகவே உலவுகிறது. சமீபத்தில் திருப்பதி வந்த சமந்தாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்காமல் கோபப்பட்டார்.
சமந்தா, நாக சைதன்யா
இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நாகசைதன்யா, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “நான் சிறுவயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் இருவரும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் அதை கடைபிடித்து வருகிறேன். சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும், முந்தைய நாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன், நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.
#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]
Previous Post

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பேரணி நடத்திய துறவிகள்

Next Post

வங்கக்கடலில் இன்று மாலை ‘குலாப்’ புயல்!

Next Post
வங்கக்கடலில் இன்று மாலை ‘குலாப்’ புயல்!

வங்கக்கடலில் இன்று மாலை ‘குலாப்’ புயல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures