தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கி, நாட்டை மீண்டும் திறக்க சுகாதார பரிந்துரைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான திட்டத்தை வகுக்க கோவிட் கட்டுப்பாட்டிற்கான சிறப்பு குழு முடிவு செய்துள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி மூன்று பகுதிகளை உள்ளடக்கிய 3 தொடர்புடைய அதிகாரிகளால் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.
சுகாதார அமைச்சகம் மற்றும் சுகாதார நிபுணர் குழுக்களின் வழிகாட்டுதலின் கீழ், பொதுத்துறை சேவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பொது நிர்வாக அமைச்சகம் பரிந்துரைகளை வழங்கவுள்ளது.
போக்குவரத்து அமைச்சகம், பொது போக்குவரத்து குறித்து பரிந்துரைகளை வழங்கும். அதேநேரம் தொழில் அமைச்சகம் தனியார் துறையில் சேவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த பரிந்துரைகள் வழங்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தலைமையில் நடைபெற்ற கோவிட் கட்டுப்பாடு குறித்த சிறப்பு குழுவின் இணையம் மூலமான கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த திட்டங்களை செயற்படுத்தும்போது பொது சுகாதார ஆய்வாளர்கள், உள்ளூர் அரசியல் அதிகாரிகள், கிராம வளர்ச்சி குழுக்கள் மற்றும் ஊடகங்களின் முழுமையான ஆதரவை நாட வேண்டும் என்று அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]