தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு, அடுத்ததாக சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
அவர் நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இப்படத்தில் வடிவேலு 2 பாடல்கள் பாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.
http://Facebook page / easy 24 news