சிகரட், சுருட்டு அல்லது வேறு புகை பாவனை செய்பவர்களே கொவிட் மரணங்களுக்கு ஆளாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றுது என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
கொவிட் தொற்றினால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
சிகரட், சுருட்டு அல்லது பேறு புகை பாவனை செய்பவர்களே கொவிட் மரணங்களுக்கு ஆளாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றுது. அவ்வாறான மரணங்கள் பல அண்மைக்காலத்தில் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
புகைப்பிடிப்பதன் காரணமாக நுரையீரலின் செயற்பாடுகள் பலவீனமடைகின்றன. கொவிட் தொற்று ஏற்படுவதன் மூலம் அவ்வாறானவர்களுக்கு கொவிட் நியுமோனியா நிலைமை மிக விரைவாக ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதால், அதிகமானவர்கள் தானாகவே புகை பிடித்தலுக்கு ஆளாகின்றனர்.அவ்வாறே புகை உடலுக்குள் செல்வது ஆபத்தானதாகும். அதேபோன்று புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருக்கும் சிறுவர்களுக்கும் அவ்வாறே சிகரட் நச்சு புகை உடலுக்குள் செல்ல முடியும்.
அவ்வாறு தானாகவே புகை பிடித்தலுக்கு ஆளாகின்ற சிறுவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு பாரிய சிக்கல்கள் வெளிப்பட்டு, மரணமும் ஏற்படலாம் என்றார்.