தயவுசெய்து என் குடும்பத்த காப்பாத்துங்க – கதறும் ஸ்ரீகாந்த்
நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்து, தயாரித்துள்ள படம் நம்பியார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் படம் குறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது, முதல் தயாரிப்பு படம் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன்.
என்கிட்ட இருந்த எல்லாத்தையும் எடுத்து இந்தப் படத்தில் போட்டிருக்கேன், பல பிரச்சனைகள், இடையூறுகள், தடைகள் எல்லாவற்றையும் தாண்டி படத்தை கொண்டு வந்திருக்கிறேன்.
படத்தை மக்களிடம் கொடுத்துவிட்டேன், என் குடும்பத்தையும் காப்பாற்றுங்க என உருக்கமாக பேசியுள்ளார்.