சீனாவில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் பலத்த மழைக்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சீனாவின் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை பெய்தது.
ஹூபெய் நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தப்படி உள்ளனர்.
ஹூபெய் மாகாணத்தில் நேற்றும், இன்றும் 503 மி.மீ. மழை பெய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அந்த மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
8 ஆயிரம் பேர் ஆபத்தான பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். பலத்த மழை காரணமாக 21 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் மாயமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
கடந்த ஒரு மாதமாக சீனாவில் பெய்து வரும் பலத்த மழைக்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________
http://Facebook page / easy 24 news