தேசிய விளையாட்டு சங்கத்தின் முதன்மை செயற்பாட்டின் மூலமாக தொழிற்சார் வீர, வீராங்கனைகளை உருவாக்குதல் மற்றும் அவர்களுக்கான நிதியுதவி வழங்கும் 8 ஆவது ஒப்பந்தம் வேலைத்திட்டம் நேற்றைய தினம் (14) நடைபெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக, கபடி விளையாட்டில் தங்களை ஈடுபடுத்தியுள்ள வீர, வீராங்கனைகள் தங்களின் திறமைகள் மற்றும் ஆற்றல்களை அதிகரித்துக்கொள்வதற்கு 41 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.
வீர, வீராங்கனைகளின் திறமைகளுக்கேற்ற அவர்களுக்கான நிதியுதவியை வழங்குவதுடன், அவர்ககளின் ஆற்றல் திறமைகளை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு அவர்களுக்கு வாய்ப்புக்களை அளிக்கவேண்டும். இதற்காக, அதிகளவான விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.
இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், தேசிய விளையாட்டு சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கை கபடி சம்மேளனத்தின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.