வரலாற்று சாதனை படைத்த மாணவி

அமெரிக்காவில் ‘ ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பீ ‘ இறுதிப் போட்டியில் முதல் முறையாக  அமெரிக்க ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த மாணவி வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில், ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பீ எனப்படும், மிக கடினமான ஆங்கில சொற்களை தவறின்றி எழுதும் போட்டி, 1925 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போட்டியில், கடந்த, 20 ஆண்டுகளாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டுக்கான ஸ்பெல்லிங் பீ போட்டி நடத்தப்படவில்லை.

நடப்பு ஆண்டுக்கான ஆரம்பக்கட்ட போட்டிகள், ‘ஆன்லைன்’ வாயிலாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில், 11 மாணவ – மாணவியர், இறுதி போட்டிக்கு தேர்வாகினர் அதில், 9 பேர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

இறுதிப் போட்டி, புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ அருகே உள்ள, ‘வால்ட் டிஸ்னி வேர்ல்டு ரிசார்ட்ஸ்’ என்ற இடத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தின்  நியூ ஆர்லியன்ஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சைலா அவந்த்-கார்ட் ஒரு வகை வெப்பமண்டல மரமான “முர்ராயா” என்ற ஆங்கில சொல்லை தவறின்றி எழுதி வெற்றி பெற்றுள்ளார். பரிசாக அவர் 50,000அமெரிக்க டொலரை பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி, ஜில் பைடன் பங்கேற்று, இறுதிப் போட்டியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

குறித்த போட்டியில் சைலா அவந்த்-கார்ட் பங்கு பற்ற “வினோதமான” மற்றும் “திடமான” என்று உச்சரிக்க வேண்டியிருந்தது.

ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வரை பயிற்சி செய்தாலும், தவறின்றி எழுவதை ஒரு பொழுதுபோக்காக கொண்டமையாலும் வெற்றி பெற்றுள்ளார்.

அத்தோடு, கூடைப்பந்து  விளையாட்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

ஒரே நேரத்தில் பல பந்துகளை போட்டு மூன்று உலக சாதனைகளைப் படைத்துள்ளார், மேலும் NBA மெகாஸ்டார் ஸ்டீபன் கரியுடன் ஒரு விளம்பரத்தில் தோன்றியுள்ளார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *