விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துவரும் நடிகை மியா ஜார்ஜ், தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்பை கிறிஸ்தவ முறைப்படி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து , எமன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கும், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்புக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை மியா ஜார்ஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் குழந்தைக்கு லுகா ஜோசப் பிலிப் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மற்றும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
http://Facebook page / easy 24 news