இலங்கையில் மேலும் 14 டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் மேலும் 14 டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்ட 141 மாதிரிகளில் 14 பேருக்கு இந்திய டெல்டா வைரஸ் தொற்று உள்ளதாக உறுதியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு , காலி , திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலே இவ்வாறு டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக தெமட்டகொடை பகுதியில் 5 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *