Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2020 இல் 27 கோடியே 50 இலட்சம் பேர் போதைப்பொருள் பயன்பாடு – ஐ.நா

June 25, 2021
in News, World
0
2020 இல் 27 கோடியே 50 இலட்சம் பேர் போதைப்பொருள் பயன்பாடு – ஐ.நா

 

2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 27 கோடியே 50 இலட்சம் (275 million) மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியதில் சுமார் 3 கோடியே 60,00,000 (36 million) மக்கள் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என  போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள  2021 ஆண்டறிக்கையில் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, கடந்த 24 ஆண்டுகளில், கொரோனா தொற்றுநோய் காலத்தில் உலகின் பல பகுதிகளில் கஞ்சா போதைப்பொருள் பாவனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

77 நாடுகளில் உள்ள சுகாதார நிபுணர்களின் ஆய்வில் படி, 42 சதவீதமானவர்களிடம் கஞ்சா பாவனை அதிகரித்துள்ளது என கூறியுள்ளனர்.

போதைப்பொருள் பாவனை அபாயங்கள் குறித்த புரிதல் மிகவும் குறைவாகவே இருப்பது போதைப்பொருள் பாவனை விகிதங்கள் அதிகரிக்க காரணமாகிறது.

மேலும்  ஆண்டறிக்கையில்  இளைஞர்களைப் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுவிக்க கல்வி கற்பித்தல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல் கருத்துக்கும் உண்மைக்கும்  இடையிலான இடைவெளியை நீக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என கண்டறியப்பட்டுள்ளதாக UNODC நிர்வாக இயக்குனர் கடா வாலி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதே இந்த ஆண்டின் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தின் கருப்பொருளாகும்.

போதைப்பொருள் குறித்த உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள் “, சான்றுகள் தளத்தை வலுப்படுத்துவது மற்றும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம், சர்வதேச சமூகம், அரசாங்கங்கள், சிவில் சமூகம், குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க முடியும், போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் சிறந்த இலக்கு முயற்சிகள் மற்றும் உலக மருந்துகளை சமாளித்தல் சவால்கள், “என்று அவர் தெரிவித்துள்ளார்.

2010-2019 க்கு இடையில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

மக்கள்தொகை மாற்றங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய கணிப்புகள் 2030 ஆம் ஆண்டளவில் உலகளவில் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் 11 சதவிகிதம் உயர்வைக் காட்டுகின்றன.

மேலும் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் இளம் மக்கள் தொகை காரணமாக ஆப்பிரிக்காவில் 40 சதவிகிதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு.

சமீபத்திய உலகளாவிய மதிப்பீடுகளின்படி, 15 முதல் 64 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் சுமார் 5.5 சதவீதம் பேர் கடந்த வருடத்தில் ஒரு முறையாவது போதைப்பொருளைப் பயன்படுத்துகின்றனர்.

அதே நேரத்தில்  3 கோடியே 60  இலட்சம் மக்கள், அல்லது மொத்தமாக போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களில் 13 சதவீதம் பேர், போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்படுகின்றனர்.

உலகளவில், 1 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மருந்துகளை செலுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் பாதி பேர் ஹெபடைடிஸ் சி எனப்படும் கல்லீரலில் ஏற்படும் அழற்சி நோயுடன் வாழ்கின்றனர். ஓபியாய்டுகள் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் நோய்களின் மிகப்பெரிய சுமைக்கு தொடர்ந்து காரணமாகின்றன.

ஓபியாய்டு பயன்பாட்டுக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க பொதுவாக பயன்படுத்தப்படும் இரண்டு மருந்து ஓபியாய்ட் மாத்திரைகளான மெதடோன் மற்றும் புப்ரெனோர்பைன் ஆகியவை கடந்த இரண்டு தசாப்தங்களாக பாரியளவில் பயனபாடு அதிகரித்துள்ளது.

மருத்துவ பயன்பாட்டிற்கான அளவு 1999 முதல் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

இது 55 கோடியே 70 இலட்சம்  நாளாந்த அளவுகளிலிருந்து 2019 க்குள் 331 கோடியே 70  அதிகரித்துள்ளது.

இது கடந்த காலங்களை விட தற்போது அறிவியல் அடிப்படையிலான மருந்தியல் சிகிச்சை அதிகம் கிடைக்கிறது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டம் 2020 : இரண்டாவது சுற்று ஆரம்பம்

Next Post

டோலிவுட்டில் நடிக்க தனுஷுக்கு இவ்வளவு சம்பளமா?

Next Post
இப்படி ஒரு படத்தை பார்த்து சிரிச்சு ரொம்ப நாளாச்சு!!

டோலிவுட்டில் நடிக்க தனுஷுக்கு இவ்வளவு சம்பளமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures