ரஜினி-தனுஷ் கூட்டணி அமைந்ததன் பின்னணி இது தான்?
இந்நிலையில் இந்த கூட்டணி எப்படி அமைந்தது என்ற தகவல் வந்துள்ளது, அதாவது ரஜினி அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் ரஞ்சித்தை பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தாராம்.
ரஞ்சித் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பு இன்றி தான் வந்துள்ளார், படத்தின் ரிசல்ட், வரவேற்பு குறித்து கேட்ட அடுத்த நிமிடம், ரஞ்சித் இன்னொரு கதை இருந்தால் கூறுங்கள் என்று ரஜினி கூறினாராம்.
அவர் கூறிய ஒன் லைன் மிகவும் ரஜினிக்கு பிடிக்க, உடனே தனுஷிற்கு போன் செய்து நீங்களே இந்த படத்தை தயாரியுங்கள் என்றாராம். தனுஷும் சந்தோஷத்தில் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
ரஞ்சித் தற்போது இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் இருக்கிறாராம். தனுஷின் தயாரிப்பு படங்களை ரஜினி தொடர்ந்து கவனித்து வருவதால் தான் இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளார்.