Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எந்த கிழமையில் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை தீரும்

June 18, 2021
in News, ஆன்மீகம்
0
எந்த கிழமையில் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை தீரும்
நெய் தீபம் ஏற்றும் பரிகார முறையில் பல ரகசியங்களும், சூட்சுமங்களும் உள்ளன. உடனுக்குடன், தவறாது பலனளிக்கும் இந்தப் பரிகாரத்தின் மகத்தான சக்தியை அனுபவத்தில் பார்க்கலாம். எந்த கிழமையில் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை தீரும் தவறு செய்வது மனித இயல்பு. இதற்குக் காரணம், கலியுகத்தில், மனித மனதில் உறுதி குறைவதேயாகும். அதனால்தான் தர்மம் குறைந்து, அதர்மம் பலம் அடைகிறது. எத்தகைய தவறை  நாம்  செய்திருந்தாலும், அத்தகைய தோஷங்களினால் நமக்குத் துன்பங்கள் ஏற்படாமலிருக்க எளிய, சக்திவாய்ந்த பரிகாரங்களை, வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர். அத்தகைய பரிகாரங்களில், முதன்மை பெற்று விளங்குவது,  திருக்கோயில்களிலும், மகான்களின் பிருந்தா வனங்களிலும், தினமும் அல்லது குறிப்பிட்ட கிழமைகளிலும் நெய் தீபம் ஏற்றி வருவதேயாகும். இதற்கும் வசதியற்றவர்கள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். நெய் தீபம் ஏற்றும் பரிகார முறையில் பல ரகசியங்களும், சூட்சுமங்களும் உள்ளன. உடனுக்குடன், தவறாது பலனளிக்கும் இந்தப் பரிகாரத்தின் மகத்தான சக்தியை அனுபவத்தில் பார்க்கலாம். கிழமை, தோஷ பரிகாரம்: ஞாயிறு: இதயம், வயிறு, இரத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், நாத்திக எண்ணங்கள், தெய்வ நிந்தனை, பெரியோர்களை எதிர்த்து வாக்குவாதம், பித்ரு பூஜைகளை விட்டுவிடுவதால் ஏற்படும் துன்பங்கள். திங்கள்: மனக் கவலை, மனோவியாதி, நிம்மதியின்மை, பயம், தாழ்வு மனப்பான்மை, குழந்தைகளுக்கு ஏற்படும் Autism குறை, வெள்ளைப்புள்ளிகள் போன்ற சருமநோய்கள். செவ்வாய்: பெண்களுக்குத் திருமணம் தடைப்படுதல், “ஜாதகத்தில் செவ்வாய் தோஷம்”, முன்கோபம், அவசர புத்தி, பிடிவாதம், வார்த்தைகளால் பிறர் மனதைப் புண்படுத்துவது, ஜாதகத்தில் கேதுவினால் ஏற்படும் தோஷங்கள். புதன்: படிப்பில் தடை, “ஞாபக மறதி”, பாடங்களில் ஆர்வமின்மை, மாணவர்களுக்கு சகவாச தோஷம், மருந்துகளுக்குப் பிடிபடாத நோய்கள். வியாழன்: ஆண்களுக்கு விவாகம் தடைபடுவது, குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை, புத்திர பாக்கியம் (ஆண் குழந்தை), தெய்வத்திடம் நம்பிக்கையின்மை, ஆச்சார்யர், குரு ஆகியோருக்குத் துரோகம் இழைத்தல், பெரியோர்களை அவமதிப்பது, குழந்தைகளால் பிரச்சனை. வெள்ளி: தாம்பத்திய சுகக் குறைவு, கணவர் மனைவி அன்னியோன்யம் பாதிக்கப்படுதல், கடன் தொல்லைகள், மாங்கல்ய பலத்திற்குச் சோதனை, பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் மனவேதனைகள், பண விரயம். சனி: ஆயுள், ஆரோக்கியம், விபரீத நோய்கள், தொழில், பிரச்சனைகள், ராகுவினால் ஏற்படும்  பில்லி – சூனியம், செய்வினை தோஷங்கள், வேலையில் நிரந்தரமின்மை, ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தோஷங்கள். விசேஷ குறிப்பு 1. ராகுவினால் ஏற்படும் தோஷங்களுக்கு சனிக்கிழமையும், கேதுவினால் ஏற்படும் தோஷங்களுக்குச் செவ்வாய்க்கிழமையும் தீபம் ஏற்றுவது விசேஷ நன்மைகளைத் தரும். 2. நெய் என்று சொல்லி, லாபம் சம்பாதிப்பதற்காக கொழுப்பு போன்றவற்றைக் கலப்படம் செய்து விற்பவர்கள், இப்பிறவியிலேயோ அல்லது மறுபிறவிகளிலோ நினைத்துப் பார்க்கவும் முடியாத பயங்கரமான சரும நோய்கள், குஷ்ட நோய்கள் ஆகியவற்றிற்கு ஆளாவார்கள். ஆதாரம்: தர்ம சாஸ்திரம், ஆயுர்வேதம் “சாதாரண பரிகாரமாக இருக்கிறதே!” என்று எண்ணிவிடாதீர்கள்! சர்வதோஷ பரிகாரமான இதன் சக்தி மகத்தானது! http://Facebook page / easy 24 news
Previous Post

அங்காளம்மனுக்கு மூன்று அமாவாசை விரதம் இருங்கள்!

Next Post

அரங்கேற்ற அய்யனார் கோவிலின் அற்புதங்கள்

Next Post
அரங்கேற்ற அய்யனார் கோவிலின் அற்புதங்கள்

அரங்கேற்ற அய்யனார் கோவிலின் அற்புதங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures