Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென் கொரியாவிடம் வீழ்ந்த இலங்கை

June 10, 2021
in News, Sports
0

பலம்பொருந்திய தென்கொரிய அணிக்கெதிரான கால்பந்தாட்டப் போட்டியில் 0 க்கு 5 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. 2022 இல் கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான ஆசிய வலய தகுதி காண் போட்டியின்  எச் குழுவில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கான  இரண்டாம் கட்ட போட்டிகள் தென் ‍கொரியாவில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில்  தென் கொரிய அணி, முதல்  பாதியில் 3 கோல்களையும், இரண்டாவது பாதியில் 2 கோல்களையும் போட்டு மொத்தமாக  5 கோல்களை அசத்தலாக அடித்தது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு  ஒரு கோலைக்கூட அடிப்பதற்கு தென் கொரிய பின்கள வீரர்கள் வாய்ப்புக் கொடுக்கவில்லை.

பீபா தரவரிசையில் 39 ஆவது இடத்திலுள்ள தென் கொரிய அணியை 204 ஆவது இடத்திலுள்ள இலங்கை அணி நேற்றைய தினம் எதிர்த்தாடியிருந்தது. சியோல் நகரிலுள்ள கொயாங் விளையாட்டு மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

போட்டியின் 15 ஆவது நிமிடத்தில்  கிம் சின் வூக் தென் கொரியா சார்பில், முதல் கோலை அடித்ததுடன், லீ டோங் ஜியொங் இரண்டாவது கோலை அடித்திருந்தார். அதன்பின்னர் 43 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிம் சிக் வூக் கோலாக மாற்றி 3க்கு 0 என்ற கணக்கில் தமது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதைனையடுத்து, 53 ஆவது நிமிடத்தில் ஹுவாங்  ஹீசேன் கோலொன்றை அடிக்க தென் கொரிய அணியினர் பரவசத்தில் திகைத்தனர்.

55 ஆவது நிமிடத்தில் இரட்டை மஞ்சள் அட்டை மூலமாக சிவப்பு அட்டை பெற்று இலங்கை வீரர் அசிக்கர் ரஹுமான் வெளியேறியபோது, இலங்கை அணி 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது.

இதனால் தென் கொரியா மேலும் 3,4 கோல்களை போடும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், இலங்கை பின்கள வீரர்களின் திறமையால் தென் ‍கொரிய அணியால் ஒரு கோலை மாத்திரமே (77 ஆவது நிமிடம்) அடிக்க முடிந்தது.  போட்டியின் முழு நேர முடிவில் தென் கொரியா 5க்கு 0 என்ற கோல் கணக்கில் இலங்கை அணியை  வென்றது.

2022 உலகக் கிண்ண ஆசிய வலயத்தின் எச் குழுவுக்கான  இரண்டாம் கட்ட போட்டிகளில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள தென் கொரியா 4 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் சமநிலை அடைந்து 13 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தது.  லெபனான் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், துர்க்மேனிஸ்தான் 9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றன.

இப்போட்டித் தொடரில் ஒரு புள்ளியைக்கூட பெறாத இலங்கை 4 ஆவது இடத்திலும், இப்போட்டித் தொடரில் பங்கேற்காத வட கொரியா 5 ஆவது இடத்திலும் உள்ளன. இரண்டு கட்ட நிறைவில் இலங்கை அணிக்கெதிராக ‍மொத்தமாக 23 கோல்கள் அடிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை 2 கோல்களை அடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

புலனாய்வுப் பிரிவினருக்கு சாராயத்தை விற்க முற்பட்டவர் கைது

Next Post

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவால் 6,148 பேர் உயிரிழப்பா?

Next Post
மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவி சாவு

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவால் 6,148 பேர் உயிரிழப்பா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 30 யாழில் சர்வதேச மாநாடு ஏற்பாடு 

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures