அலபாமாவில் கர்ப்பிணி பெண் உட்பட ஐவரின் சடலங்கள் கண்டெடுப்பு

அலபாமாவில் கர்ப்பிணி பெண் உட்பட ஐவரின் சடலங்கள் கண்டெடுப்பு

அலபாமாவின் மொபைல் கவுண்டியின் Citronelle பகுதியில் உள்ள ஜிம் ப்லட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்தே, நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் ஐந்து மாத கர்ப்பிணி பெண் உட்பட ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இவர்கள் துப்பாக்கி மற்றும் இன்னும் சில ஆயுதங்கள் மூலம் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் Derrick Ryan Dearman என்பவரைக் கைது செய்துள்ள பொலிஸார், அவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

கைதான Dearman தன்னையும், தன்னுடைய 3 மாத கைக்குழந்தையைக் கடத்தியதாக, கடத்தப்பட்டு அவரின் பிடியில் இருந்து தப்பிய பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார். இதன் பின்னர் Dearman பொலிஸாரின் சரணடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவர் குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *