குருணாகல் மாவட்டத்தின் குலியாப்பிட்டிய காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட 82 கிராம சேவகர் பிரிவுகளில் 19 கிராம சேவகர் பிரிவுகள் தவிர்ந்த 63 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய குலியாப்பிட்டிய நகரம், அஸ்ஸெத்தும, மீகஹாகொட்டுவ, திக்ஹெர, தீகல்ல, கபலேவ, கிரிந்தவ, அனுக்கனே, மேல் கலுகமுவ, வெரலுகம, தப்போமுல்ல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தண்டகமுவ, கிழக்கு மற்றும் மேற்கு, மடகும்புருமுல்ல, மேல் வீராம்புவ, கீழ் வீராம்புவ, கொன்கஹாகெதர, துன்மோதர, கெட்டவலகெதர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் உகன காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட குமாரிகம கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.