ஸ்காபுரோ ரூச் ரிவர் தொகுதியின் வேட்பாளர் நீதன் சாண் தனது வாக்கை பதிவு செய்தார் !

ஸ்காபுரோ ரூச் ரிவர் தொகுதியின் வேட்பாளர் நீதன் சாண் தனது வாக்கை பதிவு செய்தார் !

 

ஸ்காபுரோ ரூச் ரிவர் தொகுதியின் மாகாணசபை இடைத் தேர்தலில் நேற்று (சனிக்கிழமை) காலை புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) வேட்பாளர் நீதன் சாண் வாக்களித்தார்.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் பிரதான மூன்று கட்சிகளின் வேட்பாளர்களில் புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நீதன் சாண் மாத்திரமே தான் போட்டியிடும் ஸ்காபுரோ ரூச் ரிவர் தொகுதியில் வசித்து வருகின்றார்என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செப்ரெம்பர் மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த இடைத் தேர்தலின் முன்கூட்டிய வாக்குப்பதிவு நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமானது.

நேற்றைய தினம் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் Mary Shadd பாடசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்ற நீதன் சாண், தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.
இந்த மாதம் 26ஆம் திகதிவரை இந்த இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.vote 1

vote 2

vote 3

vote 4

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *