Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாகாண சபை முறையை மேலும் பலப்படுத்துங்கள் – வேலுகுமார்

December 18, 2020
in News, Politics, World
0

புதிய அரசமைப்பு ஊடாக மாகாணசபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும். அதைவிடுத்து இனவாதிகளின் கொக்கரிப்புகளுக்கு அடிபணிந்து மாகாண சபை முறைமையை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் அரசு இறங்கக்கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் உண்பதற்காக மட்டுமே வாய்திறக்கவேண்டும், அவர்களுக்கு ஒருபோதும் உரிமைகள் வழங்கப்படக்கூடாது என்ற மமதையில் செயற்படும் பேரினவாத அரசியல்வாதிகள், அரசமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளைக்கூட பறிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அதற்கான சதித்திட்டங்களைத் தீட்டி வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது, அம்முறைமை நீக்கப்பட வேண்டும் என மீண்டும் கோஷம் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

புதியதொரு அரசமைப்பு இயற்றப்படவுள்ள சூழ்நிலையில், மாகாண சபை முறைமைக்கு எதிராக அரசின் அனுசரணையுடன் இயங்கும் இனவாதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையை புதிய அரசமைப்பின் ஊடாகப் பலவீனப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றதா? என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது.

மத்தியிலிருந்து மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும், மாகாண சபைகள் முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும் எனத் தமிழ் பேசும் மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவர்களின் உரிமைக் குரலை நசுக்குவதற்காக ,ஒடுக்குவதற்காக அரசு, திட்டமிட்ட அடிப்படையில் இனவாதிகளைக் களமிறங்கியுள்ளதா என்ற வினாவும் எழுகின்றது.

அதேவேளை, தம்வசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது. பெரும்பான்மை இன மக்களை இயக்கக்கூடிய இனவாத சக்திகள் உள்ளன என்ற நம்பிக்கையில் அரசு, மாகாண சபை முறைமையில் கைவைக்கும் பட்சத்தில் அது பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இராஜதந்திர மட்டத்திலான நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டிவரும்.

எனவே, மாகாண சபை முறைமையில் கூடிய விரைவில் அரசு நடத்த வேண்டும். அதன்பின்னர் புதிய அரசமைப்பு ஊடாக மாகாண சபை முறைமையைப் பலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Previous Post

மக்களே பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் – சவேந்திரசில்வா வேண்டுகோள்

Next Post

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

Next Post

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures