Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவில் இராணுவத்தினரின் கெடுபிடி: ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட நிலை

November 27, 2020
in News, Politics, World
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களை இராணுவத்தினர் குறித்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்த நிலையில் புதுக்குடியிருப்பு காவல்துறையினரின் உதவியுடன் குறித்த ஊடகவியலாளர் வெளியேறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

இன்று (27) மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான காவல்துறையினர் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குறிப்பாக மாவீரர் துயிலும் இல்லங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்தும் முகமாக துயிலுமில்லங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் செய்தி அறிக்கையிட சென்றநிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கின்றது.

நேற்று பிற்பகல் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருக்கின்ற வளாகத்திற்கு அண்மையாக சென்ற ஊடகவியலாளர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தை காணொளி பதிவு செய்த போது குறித்த இடத்திற்கு 500 மீட்டர் தொலைவில் நின்ற இராணுவ வீரர்கள் இருவர் குறித்த இடத்திற்கு வருகை தந்து ஊடகவியலாளரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தங்களை ஒளிப்பதிவு செய்யக்கூடாது என மிரட்டி ஊடகவியலாளரை குறித்த இடத்தில் இருந்து வெளியேற முடியாதவாறு தடை செய்திருக்கின்றனர்.

இதேவேளை குறித்த பகுதியில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் தன்னுடைய இராணுவ சீருடையை சரியாக அணியாத நிலையிலேயே இவ்வாறு ஊடகவியலாளருடன் வருகை தந்து தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தமையும் சுகாதார நடைமுறைகளை பேனாதநிலையிலும் இருந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலே தொடர்ச்சியான இந்த செயற்பாடுகள் முல்லைத்தீவில் இராணுவ ஆட்சியா இடம்பெறுகிறது என்ற சந்தேகத்தினை உறுதி செய்கிறது .

அத்தோடு குறித்த இடத்தில் ஊடகவியலாளர் உடன் தர்க்கப்பட்ட இராணுவ சிப்பாய் ஊடகவியலாளர்களின் காணொளி பதிவுகளையோ, தொலைபேசியை கூட பார்க்க முடியும் அதற்க்கு தமக்கு அதிகாரம் உண்டு எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

Previous Post

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது

Next Post

ஆய்வுகூட பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா

Next Post

ஆய்வுகூட பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

July 6, 2026
யோகி பாபு வெளியிட்ட ‘திரள்’ பட முதல் தோற்றப் பார்வை

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

July 6, 2026
எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures