கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள பொதுமக்கள் இலகுவான முறையில் தொடர்பு கொள்ளப் பல தொலைபேசி இலக்கங்களை கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, அலுவலகத்தின் இலக்கம் 0112 8600 02 முதல் 04
கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள 011 405 59 32
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு 0113 688 664 மற்றும் 011 3 030 864 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் அழைப்பை மேற்கொள்ளலாம் என கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.