புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுவதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 4ஆம் மற்றும் 5ஆம் குறுக்கு வீதிகளின் மொத்த விற்பனை நிலையங்கள் இன்று அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறக்கப்படும் என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.