அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கான தனது விஜயத்தின் போது, உள்நாட்டு எதிர்பார்ப்புகளுக்கு தன்னிச்சையான வகையில் தலையிடக் கூடாது என சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி ஏனைய நாடுகளின் உள்ளக மற்றும் வெளியுறவு விவகாரங்களில் தன்னிச்சையான தலையீடுகளை மேற்கொள்ளும் அருவருக்கத்தக்க போக்கை அமெரிக்கா மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மைக் பொம்பியோ இன்று (27) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.
இந்தநிலையில் அவரின் இலங்கை விஜயம் குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
அதில் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் போது வீதி கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யுமாறு கோருவது இந்த நாட்டின் கௌரவத்தை பாதிக்கும் செயலாக அமையாதா என்று சீனா கேள்வி எழுப்பியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையானது வௌிநாட்டு உறவுகளை தேவையறிந்து தெரிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதி ராஜாங்க செயலாளர் டீன் தொம்சன் விடுத்துள்ள அறிவித்தல், சீன – இலங்கை ராஜதந்திர உறவை பாதிக்கும் செயல் என சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

