கிளிநொச்சி உருத்திரபுரம் சந்தைக் கட்டிடத்தொகுதி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சந்தைக் கட்டிடத் தொகுதியானது 2.42மில்லியன் ரூபாய் செலவில் கரைச்சி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் வர்த்தக சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

