Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான நிவாரண காலம்

October 13, 2020
in News, Politics, World
0

செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் பட்சத்தில், புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான நிவாரண காலமொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் விரைவில் அறிவிக்கவுள்ளதாக மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சந்தன குறிப்பிட்டுள்ளார்.

செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான புதிய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கான செயன்முறை பரீட்சைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்று காரணமாக சில மாவட்டங்களில் குறித்த செயன்முறை பரீட்சைகளுக்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாக மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சந்தன தெரிவித்தார்.

இதனால் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நிலைமைகளை கருத்திற் கொண்டு, தகுந்த நடைமுறைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவித்தல்

Next Post

சுகாதார விதிமுறைகளை கட்டாயமாக்கி வெளியாகவுள்ள வர்த்தமானி

Next Post

சுகாதார விதிமுறைகளை கட்டாயமாக்கி வெளியாகவுள்ள வர்த்தமானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures