பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியாக, கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்
இந்த புதிய விதிமுறைகள் தொடர்பான வர்த்தமானி அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நேற்றைய தினம் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி நோய் இடங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சுகாதார விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முககவசங்களை அணிய மறுப்பது, சமூக தூரத்தை கடைபிடிக்க மறுப்பது போன்ற விடயங்களும், நபர்களை வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்துதல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இந்த வர்த்தமானி வெளியிடப்படும்.
சுகாதார விதிமுறைகளை பின்பற்றத் தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதை வர்த்தமானி உறுதி செய்யும். அதன்படி சுகாதார விதி முறைகளை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10,000 அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்படும். பொது பாதுகாப்பை பாதிக்கும் நபர்களுக்கு இந்த அபராதங்களில் ஒன்று அல்லது இரண்டையும் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்













