Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேங்காய் ஒன்றின் விலை 200 தொடக்கம் 250 ரூபா வரை அதிகரிக்கும் அபாயம்!

October 8, 2020
in News, Politics, World
0

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டால் நுகர்வோருக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட முடியாமல் போவதுடன் எதிர்வரும் காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை உயர்வடைவதற்கான அபாய நிலைமை உருவாகும் என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள கலாநிதி என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் என தங்களை அடையாளப்படுத்தியுள்ள போலி கும்பலொன்றின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு இறக்குமதி செய்யும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் திங்கட்கிழமையன்று வெளியிடவுள்ளார்.

உண்மையில், இது எந்த விதத்திலும் நாட்டுக்கு நன்மை பயக்காத ஒரு விடயமாகும். ஏனெனில், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகரிப்பின் பின்னணியில் மறைமுகமாக பாரிய குளறுபடிகள் உள்ளன.

தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் என கூறிக்கொண்டுள்ள இந்த கும்பல் பாம் எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து சந்தைப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது.

‘பொல் குருட்ட’ என்ற தேங்காயின் ஒரு பகுதியை பயன்படுத்தி அதனுடன் எண்ணெய்த் தன்மையான பதார்த்தமொன்றை கலந்து பாம் எண்ணெய்யுடன் கலவை செய்து விற்பனை செய்வதே இந்த மோசடிக் கும்பலின் கள்ளத்தனமாகும்.

இதனால் பாவனையாளர்களுக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்காது போகும்” என தெரிவித்தார். இந்த நடவடிக்கையினால் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா முதல் 250 ரூபா வரை அதிகரிக்கும் அபாய நிலை உருவாகும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வடக்கிலுள்ள பாடசாலைகளின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யுமாறு சிறீதரன் கோரிக்கை

Next Post

வௌ்ளிக்கிழமை தொழுகை ; 50 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட வேண்டும்

Next Post

வௌ்ளிக்கிழமை தொழுகை ; 50 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures