மினுவாங்கொடவில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலுடன் தொடர்புடையவர்கள் கொழும்பு மாவட்டத்தில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், மொனராகல, மாத்தளை, குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய இடங்களிலேயே கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 739 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது.

