Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கஜேந்திரனின் உரைக்கு எதிராக சபையில் ஆளுந்தரப்பு போர்க்கொடி

October 7, 2020
in News, Politics, World
0

தனது மக்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் ஒசாமா பின்லேடனா அல்லது 12 வயது சிறுவன் பாலச்சந்திரனுக்குப் பிஸ்கட், தண்ணீர் கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றவர்கள் பின்லேடன்களா எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பியதையடுத்து அரச மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் கொதித்தெழுந்தனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கஜேந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய முன்னாள் அமைச்சரும் அரச தரப்பு எம்.பியுமான அநுர பிரியதர்சன யாப்பா, “படையினர் பயங்கரவாதிகளையே அழித்தனர். அவர்கள் ஒரு சிறுவனைக்கூடக் கொன்றதில்லை” எனக் கூறிக்கொண்டிருந்தபோது சபைக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்த நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், “உறுப்பினரே இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல” என்றார். எனினும், விடாத அநுர பிரியதர்சன யாப்பா, “கஜேந்திரனின் கூற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும்” என்றார். இதையடுத்து எழுந்த இன்னும் சில புதுமுக எம்.பிக்கள், “எமது படையினர் ஒருபோதுமே சிறுவர்களைக் கொன்றதில்லை” என்று கூச்சலிட்டதுடன் அவர்களும் கஜேந்திரனின் கூற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறியதுடன் கடுமையாகத் திட்டித் தீர்த்தனர்.

எனினும், கஜேந்திரனின் கூற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்க உத்தரவிடாத நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், “இந்த விடயத்தை சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்கின்றேன்” என்றார்.

இதையடுத்து எழுந்த முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கஜேந்திரனின் கூற்றைக் கடுமையாகக் கண்டித்ததுடன் பாலச்சந்திரனின் மரணத்துக்கும் படையினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார். இது தொடர்பில் கஜேந்திரன் ஏதோ சொல்ல முயற்சிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சத்தமிட்டு அவரை அடக்கி விட்டனர்.

Previous Post

லண்டன் ப்ரெண்ட்ஃபோர்டில் தமிழ் குடும்பம் ஒன்றில் இருவர் கொலை

Next Post

09மாதங்களில் மட்டும் 6,063 சிறுவர் முறைப்பாடுகள்

Next Post

09மாதங்களில் மட்டும் 6,063 சிறுவர் முறைப்பாடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்

July 24, 2026
ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

July 24, 2026
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures