புத்தளம் மாவட்டத்தில் அதிக விலையில் அரிசி மற்றும் தேங்காய் என்பவற்றை விற்பனை செய்த 70 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது அவர்கள் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதியில் சுமார் 300 வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதேச மக்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

