முல்லைத்தீவில் கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியிலிருந்து நேற்று இரவு கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் தாக்கியுள்ளனர்என தெரியவந்துள்ளது .
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தொழிலாளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
அத்துடன் குறித்த மீனவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவத்தில் கள்ளப்பாடு பகுதியினைச் சேர்ந்த 46 தொழிலாளியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது .

