Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா பாதுகாப்பிற்கு உலக வங்கி 56 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

September 14, 2020
in News, Politics, World
0

கொரோனா தாக்கங்களைத் தணிப்பதற்கு உலக வங்கி இலங்கைக்கு 56 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி உதவுவதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை 12.09.2020 வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விவசாயத் துறையில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதற்கும், பொதுப் போக்குவரத்தில் கொவிட் -19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், பாடசாலை மாணவர்களுக்கான தொலைக் கல்வியை எளிதாக்குவதற்கும், அரசாங்க சேவைகளின் விநியோகத்தை மேம்படுத்த டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதற்கும் இலங்கையில் நடைபெற்று வரும் திட்டங்களுக்கு உலக வங்கி 56 மில்லியன் டொலர்களை மறு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த புதிய நிதியுதவி 128.6 மில்லியன் டொலர்களானது ஏப்ரல் 2ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட இலங்கை கொவிட் -19 அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலைத் திட்டம் (COVID-19 Emergency Response and Health System Preparedness Project) இற்கு நிதியளிக்கின்றது.

“கொவிட் -19 அவசர தேவைகளுக்கு பதிலளிப்பதற்கும் மீட்புக்குத் தயார்படுத்துவதற்கும் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்” என்று மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் எச். ஹதாத்-செர்வோஸ் கூறினார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கும், மக்கள் நோய்வாய்ப்படாமல் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம் என்பதை உறுதி செய்வதற்கும், பொது சேவைகளை தொடர்ந்து வழங்க டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துவதற்கும் தற்போதுள்ள திட்டங்களிலிருந்து நிதியுதவிகளை மறு ஒதுக்கீடு செய்வதற்கு நாங்கள் வேகமாக நகர்கிறோம்.”

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உதவ ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய விவசாய குடும்பங்களுக்கு விதைகளைக் கொள்வனவு செய்வதற்கும் சேமிப்பு வசதிகளைப் புனரமைப்புச் செய்வதற்கும் இந்த நிதி உதவும். விரிவான இடர் பகுப்பாய்வு மற்றும் அவசரகால தொடர்ச்சியான திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பாடசாலைச் சூழலை உருவாக்கும் அதே வேளையில், குறிப்பாக கிராமப்புற, சிறிய மற்றும் வளமற்ற பாடசாலைகளில், தொலை கல்வி மற்றும் மின்- கற்றல் மூலம் பாடசாலை மாணவர்களின் கற்றலை எளிதாக்க இது உதவும். நேரடிப் பாடசாலை மீண்டும் தொடங்கியதும் மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பாடசாலைச் சூழலை உருவாக்கவும் இது உதவும்.

இந்த நிதியளிப்பானது கிருமி நீக்கம் செய்யவும், கை சுத்திகரிப்பான்கள், பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவி ஆகியவற்றைக் கொண்ட அத்தியாவசிய பொது போக்குவரத்தை உறுதிப்படுத்தவும் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் காணொளிக் கருத்தரங்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து வேலையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் முழுவதும் ஒத்துழைப்பை மேம்படுத்த பொது சேவைகளை மேம்படுத்த டிஜிட்டல் ஆவண முகாமைத்துவ அமைப்பை ஆதரிக்கிறது.

நான்கு செயலில் உள்ள நான்கு திட்டங்களின் தற்செயல் அவசர பிரதிபலிப்புக் கூறுகளை (ஊநுசுஊ) செயல்படுத்துவதன் மூலம் இந்த நிதி கிடைத்தது. அவசரகால பதிலளிப்பு தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இருக்கும் திட்டங்களிலிருந்து நிதியை மறு ஒதுக்கீடு செய்ய ஊநுசுஊ கள் அனுமதிக்கின்றன. மொத்த அபிவிருத்தி உதவித் திட்டத்திலிருந்து 17 மில்லியன் டொலர்கள், பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்திலிருந்து 15 மில்லியன் டொலர்கள், இலங்கை ஆரம்ப சுகாதார பராமரிப்பு அமைப்பு வலுப்படுத்தும் திட்டத்திலிருந்து 9 மில்லியன் டொலர்கள் மற்றும் காலநிலை திறன் நீர்ப்பாசன விவசாய திட்டத்திலிருந்து 15 மில்லியன் டொலர்கள் என மொத்தம் 56 மில்லியன் டொலர்கள் நிதி மறு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

Previous Post

துவிச்சக்கர வண்டி விபத்தில் 15 வயது மாணவன் பலி

Next Post

பல்கலை வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியீடு

Next Post

பல்கலை வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures