நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 15 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஈச்சங்குளம் பிரதான வீதியில் தனியார் கல்வி நிலையத்தில் இருந்து வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மாணவனை அதே பாதையில் சென்ற மோட்டர் சைக்கிள் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 15 வயதுடைய எழில்ராசா புவிதரன் என்ற புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் மரணமடைந்துள்ளதுடன், மோட்டர் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
மூன்று மோட்டர் சைக்கிள்கள் சமாந்தரமாக சென்றமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்துள்ளதுடன், விபத்துக்குள்ளான மோட்டர் சைக்கிள் தவிர ஏனை இரு மோட்டர் சைக்கிள்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

