அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவளித்து வருகிறார்.
தற்போது குறித்த ஆர்ப்பாட்டங்களின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக ஏதிர்கட்சி தலைவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டுள்ளார் சந்திரிகா.
அவரது தலைமையின் கீழ் உருவான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பில் ஈடுபட்டுவந்த சந்திரிக்கா தற்போது எதிர்க்கட்சிகளுடன் நேரடியாக விவகாரங்களில் ஈடுப்பட்டுவருகிறார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விரைவில் பொது மேடைகளில் ஏறவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

