விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த இளைஞர் யுவதிகளுக்கான வர்ண விருது வழங்கும் விழா அம்பாறை ஹார்டி தொழினுட்பக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்களன்று 14.09.2020 இவ்விழா கோலாகலமாக நடைபெற ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டில் பிரதேச செயலக மட்டத்தில் சாதனை நிலைநாட்டி தெரிவாகியுள்ள வீர, வீராங்கனைகளை விருது விழாவிற்குத் தயார்படுத்துமாறு விளையாட்டு உத்தியோகத்தர்கள் கேட்கப்பட்டுள்ளார்கள்.
அதன்படி வர்ண விருது விழாவில் பங்கு கொண்டு விருது பெறுவோர் ஆண்களாயின் அவர்கள் வெள்ளை நிற சேர்ட்டும் கறுப்பு நிற நீளக் காற்சட்டையும், பெண்களாயின் சேலையும் அணிந்து வரவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

