புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் வரை வெளிவாரி கலை பட்டங்களுக்கான பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கலைத்துறையில் வெளிவாரிப் பட்டங்களுக்கான புதிய பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கா தெரிவித்துள்ளதாவது,
”தற்போதுள்ள கலைப்பட்டப்படிப்புக்கள் நீண்டகாலமாக புதிப்பிக்கப்படாததால் பட்டம் பெற்ற மாணவர்கள் வேலை தேடும் போது பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
தற்போதைய வேலை சந்தையில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் வெளி பட்டப்படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
தற்போதுள்ள பாடங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமிக்கவும், வெளிவாரிப் கலை பட்டப்படிப்பின் கீழ் புதிய பாடங்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

