யாழ்ப்பாணம் – கோப்பாய் பூதர்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த விபத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே இவ்வாறு உயிரிழந்தார்.
அத்தோடு, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த கச்சேரி – நல்லூர் வீதியைச் சேர்ந்த நபர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

