தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவின் ஸ்தாபகர்களில் ஒருவரான குட்டிமணியின் பாரியார் இராசரூபராணி காலமாகியுள்ளார்.
இந்நிலையில், இந்த துயரச் செய்தி அறிந்து தாம் வேதனையடைகின்றோம் என ரெலோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
“தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகராக எமது இயக்கத்தின் முதுகெலும்பாக செயற்பட்டவர் குட்டிமணி. அவரின் பாரியார் இராசரூபராணி அவர்கள் இயற்கை எய்திய துயரச் செய்தி அறிந்து நாம் வேதனையடைகின்றோம்.
இவரது துணைவியாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும் , கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

