மட்டக்குளிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று காலை 8.40 மணியளவில் மோதரையில் இருந்து வத்தல திசையில் பயணித்த லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த இரு முச்சக்கரவண்டிகளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து இடம்பெற்ற விதம் அருகில் இருந்த சிசிரிவி யில் பதிவாகியிருந்தது.
விபத்தில் ஒரு முச்சக்கரவண்டியின் ஓட்டுனர் மற்றும் அதில் பயணித்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மட்டக்குளிய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் இரண்டாவது முச்சக்கரவண்டியில் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

