மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி எம்.பீ.சீ.எஸ்.வீதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மாவடிச்சேனையைச் சேர்ந்த சீனி முகம்மது என்வர் மீது அவ்வீதியால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இரு இளைஞர்கள் மோதியதில் பலத்த காயங்களுடன் குறித்த நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
விபத்தில் சிக்கிய நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

