கண்டி மாவட்டத்தின் சில இடங்களில் இரண்டாவது தடவையாகவும் இன்று ஏற்பட்ட நில நடுக்கம் குறித்து புவிசரிதவியல் ஆய்வுமற்றும் சுரங்க பணியகம் விளக்கம் அளித்துள்ளது.
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள சுண்ணக்கல் பாறைகளில் ஏற்பட்ட வெடிப்புக்கள் அதிர்வுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பணியகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் உதய டீசில்வா தெரிவித்தார்.
எனினும் இதனை உறுதியாக கண்டுபிடிப்பதற்கு தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இரண்டு நாட்களில் முடிவை அறிவிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
கடந்த 29ஆம் திகதி கண்டியின் சில பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று நில நடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

