அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் குழுவின் முதற்கட்ட அறிக்கை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று பிரதமர் செயலகத்தில் சந்தித்த நிலையில் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் இந்தக் குழுவில் இதுவரை சுமார் ஆறாயிரத்து 952 பேர் வரை சாட்சியம் வழங்கியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019அம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராய புதிய அரசாங்கத்தினால் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

