சீன தயாரிப்பிலான தரமற்ற ரயில் பெட்டிகளைக் கொண்ட ரயில் சேவைகளில் இருந்து விலகுவதற்கு மேற்கொண்டிருந்த தீர்மானத்தை ரயில் சாரதிகள் கைவிட்டுள்ளனர்.
ரயில் திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.
இதேவேளை, நாட்டில் சீன தயாரிப்பிலான 100 ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதாகவும், அவை தரமற்றது எனவும் ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

