Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்; வியாழேந்திரன்

August 30, 2020
in News, Politics, World
0

“எமது தமிழ் சமூகம் பிறருடைய கடைகளில் வேலை செய்கின்றார்கள். ஆனால் தமிழர்களுடைய கடைகளில் ஏனைய சமூகத்தவர்கள் வேலை செய்வதைக் இந்த கிழக்கு மாகாணத்திலே காணமுடியாது.

இதற்கு தமிழர்களுடைய அரசியல் போக்குத்தான் காரணமாகும். வியாழேந்திரன் கட்சி மாறிவிட்டார் அவர் காணாமல் போய்விடுவார் என மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான் மாத்திரம்தான்.

நான் யாரையும் விமர்சித்து விசமத்தனம்பேசி எங்களுடைய அரசியல் பயணத்தை தொடர விரும்பவில்லை. ஒரு காத்திரபூர்வமான அரசியலை நாம் கட்டமைக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கின்றோம். என்மீது நம்பிக்கை வைத்துதான் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள்.

எனக்கு வாக்களித்த 33424 அத்தனை உறவுகளுக்கும், எனது ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 2400 இற்கு மேற்பட்ட வாக்குகள் எமக்குக் குறைந்திருந்தால் காளிகோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய ஹிஸ்புல்லா வெற்றி பெற்றிருப்பார்.”

இவ்வாறு தபால் சேவைகள், மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (29) மட்டக்களப்பு துறைநீலாவணையில் நடைபெற்ற அமைச்சரை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

“என்னைப் பொறுத்தவரையில் உரிமையோடு சார்ந்த அபிவிருத்தியின்பால் இந்த மாகாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். கிழக்கில் 58.9 வீதமாக இருந்த தமிழர்கள் தற்போது 38.06 வீதமாக இருக்கின்றோம். தற்போது நில, இன, மற்றும் இன்னோரன்ன வளர்ச்சி என்பது ஒரு அசம்ந்தப் போக்கில்தான் தமிழர்களைப் பொறுத்தவரையில் சென்று கொண்டிருக்கின்றது.

இந்த பிரதிகூலமான நிலமை மாற்றியமைக்கப்பட்டு, அனுகூலமான தன்மை மாற்றிக்கமைக்கப்படல் வேண்டும். பூசி மெழுகுகின்ற அரசியலை செய்து விட்டுச் செல்ல முடியாது. உணர்வு பூர்வமான ஒரு அரோக்கியமான அரசியலை கிழக்கில் கட்டியெழுப்ப வேண்டும். ஏனெனில் பல பிரச்சனைகளோடும், வேதனைகளோடும் வாழ்கின்றது தமிழ் சமூகம்தான்.

இம்முறை நாம் தேர்தலில் வைத்த தொணிப் பொருள் மக்கள் எதிர்பார்ப்பு கள அரசியல். அந்த வகையில்தான் வடக்கு கிழக்கிலே மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே தமிழன் நான் மாத்திரம்மான். நாங்கள் சீனி, பருப்பு, வேறு பார்சல், மதுபானம் கொடுத்து மக்களின் வாக்குகளைப் பெறவில்லை.
இந்த மாகாணத்திலே எமது மக்களின் இருப்பை உறுத்திப்படுத்துபவர்களாக செயற்பட வேண்டும். நையாண்டி செயற்பாடுகள் உணர்வு பூர்வமான விடையங்களுக்கு ஒத்துவராது. அவ்வாறானவர்களை இணைத்து செயற்பட்டதனால்தான் மட்டக்களப்பிலே அரசாங்க கட்சியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மக்கள் எமக்குத் தந்த அங்கீகாரத்தினால் 68 பேர் கொண்ட அமைச்சரவiயில் நானும் ஒருவராக உள்ளேன்.

கிழக்கு மாகாணத்திலே பல்வேறுபட்ட தேவைகள் சவால்கள் என்பன மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அதனை எமது தலைமீது அந்த பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கின்றது. எமக்குக் கிடைத்திருக்கின்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, அதனை நாம் சரியாக திட்டமிட்டு காத்திரமான முறையில் முன்னெடுப்போம். 24 மணித்தியாலயங்களும் செயற்பட்டு, ஏனைய அமைச்சுக்களிடமிருந்தும் அதி உட்ச பட்சமான சேவைகளை இந்த மாகாணத்திற்குக் கொண்டுவருவோம். தனித் தமிழ் தொகுதியாகவுள்ள பட்டிருப்புத் தொகுதியிலிருந்து ஹிஸ்;புல்லாவின் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிக்கும் வாக்களித்திருந்தார்கள். அவ்வாறில்லாமல் எமது மக்கள் ஒற்றுமையாக வாக்களித்திருந்தால் இந்த மாட்டத்தில் 5 பேரையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்திருக்க முடிந்திருக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி ஏனைய கட்சியில் போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றதே இல்லை. அதபோல்தான் எனையும் சொன்னார்கள். அந்த சரித்திரத்தையே நாம் உடைத்து எறிந்துள்ளோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு கிழக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேறு;பவர்கள்தான் மக்கள் தலைவனாக இனிவரும் காலங்களில் இருக்க முடியும். முக்களை ஏமாற்றப் புறப்பட்டால் என்ன நடக்கும் என்பதை வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் என்ன நடக்கும் என்பதை தமது வாக்கு என்கின்ற ஆயுத்தினூடாக கடந்த 5 ஆம் திகதி செய்து காட்டியிருக்கின்றார்கள். பித்தலாட்டம் செய்பவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்.

5 வருடகாலத்திற்கு எமக்குக் கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பை சரியாக பயப்படுத்த வேண்டும் இலங்கையிலே 3 தமிழர்கள் மொட்டுச் சின்னத்திலே வெற்றி பெற்றுள்ளது, அதற்கு தமிழருக்கு ஒரு தேசியப் பட்டடியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இலங்கையில் 7 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள், ஆனால் அவர்கள் ஒரு தமிழருக்குக் கூட தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படவிலலை.

சிறுபான்மை மக்களும் பாதிக்கப்படாத வகையிலே நலனோம்புத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ஜனாதிபதி அவர்கள் உறுதியாக இருக்கின்றார். எமது அபிவிருத்தி, உரிமை சாநர்ந்த சாதகமான சமிக்ஞைகள் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே முன்போக்கு தமிழர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பதற்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். மக்களின் பிரச்சனைகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

Previous Post

அரசியலமைப்பு மாற்றம் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு வழிகோலும்!

Next Post

தெல்லிப்பளை துர்க்கை அம்மனுக்கு இன்று தேர்

Next Post

தெல்லிப்பளை துர்க்கை அம்மனுக்கு இன்று தேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures