கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சலுகை அடிப்படையில் அரச பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உந்துருளிகளின் உரிமங்களை, உரிமையாளர்களின் பெயர்களில் பதிவு செய்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.